KRP
செல்வச் செழிப்பில் வளர்ந்து வாழ்ந்து புகழ் மணக்க இருந்தவர்கள் பின்னாளில் - ஏழ்மையான நிலைக்கு வந்து - சாதாரண வாழ்வு, எளிமையான வாழ்வு வாழ நேரிட்டபோதும் குணக்குன்றாக வாழ்ந்து காட்டியது. மனத்தைத் தொட்டது. பொருளாதார நிலையில் ஏற்பட்ட வீழ்ச்சியினால் துவண்டு போகாமல் தாங்கிக்கொண்டு கேலியும், கிண்டலுமாகப் பேசி, பழகி , உரையாடி பிறரது மகிழ்ச்சிக்கு இயன்றவரை வாழ்ந்து உயர்ந்து நின்றதை எண்ணிடும்போது நெஞ்சம் முழுதும் நெகிழ்ந்து போகிறது. ஏழை, எளியவரை உதாசீனப்படுத்தாமல் அவர்களோடு சமமாகப் பழகிடும் உள்ளங்கொண்டு உயர்ந்து நின்றவர்கள் என்ற நினைவு நெஞ்சில் நிழலாடுகிறது.
2001
நினைவுகள்
2 - 4 - 2005- இன்று S.S.L.C -க்குக் கடைசிபரீட்சை முடிந்த நாள். Joshua -ஐ 1.40 மணிக்கு அவனது ஸ்கூலில் விட்டுத் திரும்பியபோது St. Andrews பள்ளியில் S.S.L.C. முடித்த பெண்கள், அவர்களது தாய் அல்லது உறவினர் தங்கள் தலையில் பெட்டியைச் சுமந்து வர வெளியேறிக் கொண்டிருந்தனர். அதில் ஒரு பெண் அழுது சிவந்த - கண்ணீர் ததும்பிய-விழிகளுடன் சென்றாள். 1958-ஆம் ஆண்டு நாங்கள் (Jeyaraj - ம், நானும்) Schwartz High School Boarding -ல் இருந்து வெளியேறிச் சென்றது நினைவுக்கு வந்தது.
கடைசி பரீட்சை முடிந்த அன்று மாலை சினிமா பார்த்தோம். 'ராம பக்த ஹனுமான்' என்ற திரைப்படம். கீழக்கரை செல்ல மறுநாள் மதியம் கிளம்பினோம். மண்டபம் கேம்பில் எங்களுடன் E.S.L.C. படித்த, முகம் முழுதும் அம்மைத் தழும்புடைய - இராஜேந்திரனின் குதிரை வண்டியில் Bus Stand செல்லுமுன் Head Master Mr. Alfred Jacob- ஐப் பார்க்க அவர் வீட்டின் முன் நின்றோம். அவர் சாப்பிட்டு முடியும் வரை அரை மணி நேரம் காத்துக் கிடந்தோம். கீழக்கரையில் வீட்டிற்குப் போய்ச் சேர்ந்தவுடன் அப்பாவிடம் திட்டு வாங்கினோம். காரணம் என்னவெனில் SSLC Question papers மற்றும் Note books எல்லாவற்றையும் பழைய பேப்பர் கடையில் விலைக்குப் போட்டுவிட்டு வெறுமையாய் வீட்டிற்குப் போனதுதான். மேரி அக்கா ஜெயராஜை ஆறுதல் கூறித் தேற்றினார்கள். SSLC பரீட்சை சமயம் நான் second showவுக்கு Boarding -ல் இருந்து தெரியாமல் சென்று 'உத்தம புத்திரன் ' சினிமா பார்த்தேன். அதற்கு மறுநாள் Social Studies, சிறப்புத் தமிழ் என 2 exams இருந்தன. நாள் அதில் தான் 86 marks வாங்கினேன். தெரியாமல் சினிமாவுக்குப் போவது பின்னரும் கல்லூரி படிப்பின் போதும் தொடர்ந்தது.
Memories of Mandapam Camp life (Recorded in 2010)
ஏன் எழுதுகிறேன் ?
இதை எனக்காவே எழுதுகிறேன் .வேறு யாருக்காகவும் அல்ல.
இளமைப் பருவத்து இனிய நினைவுகளை இப்போது எண்ணிப் பார்த்தாலும் இன்ப உணர்வுகள் வெள்ளம் போன்று உள்ளத்தில் பாய்கின்றன.
நினைக்க நினைக்க தித்திக்கும் தீங்கரும்பாய் இனித்திடும் இளமைக் காலத்து நிகழ்ச்சிகளை – அவை என்றும் நினைவினின்று நீங்காவண்ணம் எழுத்தினில் வடித்து வைக்கும் எண்ணத்தில் எழுதுகிறேன்
கவலை ஏதுமின்றி சுதந்திரப் பறவையாக துள்ளித் திரிந்த பள்ளிப் பருவத்து நிகழ்வுகளை – அவற்றை எண்ணும்போதெல்லாம் இதயத்தில் எழுகின்ற இன்ப உணர்வுகளை வற்றாத ஊற்றாக பாதுகாத்துக் கொள்வதற்காக எழுதுகிறேன்
கால இடைவெளி அடர்ந்த பனிப்படலம் போன்று இடையே நின்று சிறார் பருவத்து இனிமை நினைவுகளை மறைத்துவிடும் அபாயத்தைத் தடுத்திடவும் - நீங்காத நினைவுகளாக அவை போற்றிக் காக்கப்படவும் வேண்டி இதை எழுதுகிறேன்
இருளகற்றும் ஒளிச்சுடர் போன்று ,பழங்காலத்து இனிய நினைவுகள் மனத்தில் இடம்பிடிக்க முயலுகின்ற துயர எண்ணங்களைத் துறத்தியடிக்கத் துணைபுரிவதாலும் இதை எழுதுகிறேன் .
கடந்த காலத்துக் களிப்பான அனுபவங்கள் மறந்துபோகாமல் , மறைந்துபோகாமல் அழியாத கோலங்களாக நெஞ்சில் ஆழப்பதிந்து நிற்க வைப்பதற்காகவும் இதை எழுதுகிறேன்.
நினைக்கும் போதெல்லாம் நெஞ்சிலே பொங்கி பிரவகிக்கும் இன்ப வெள்ளத்தினை அணைகட்டித் தேக்கி வைத்துக்கொள்வதற்காக இதை எழுதுகிறேன்.
________________________________________________________________________
எத்தனையோ ஆண்டுகள் கழிந்துவிட்ட போதிலும் இன்றைக்கும் அன்றைய நாட்களின் நினைவுகள் மகிழ்ச்சியைக் கொட்டும் மலையருவிகளாகத் திகழ்கின்றன.
முன்பு புசித்தவற்றை அசை போடும் பசுவைப்போன்று - முற்காலத்து நினைவுகளை மீண்டும் மீண்டும் நினைத்துப் பார்த்து பரவசம் கொள்ளுதல் மனத்திற்கு ஒத்தடம் கொடுத்தது போன்று உள்ளது. அது வலிநீக்கும் சுகானுபவமாக அமைகிறது
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
STRONG FOUNDATION
Mandapam Camp-ல் கழித்த இளம் பருவம் பின்னர் அமைந்த வாழ்வு முழுமைக்கும் ஒரு வலுவான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்துள்ளது என்று எண்ணுகிறேன். E,S.L.C. வரை நாங்கள் அங்கு படித்தபோது பெற்ற வளர்ச்சி – அறிவு சார்ந்த , உணர்வு சார்ந்த வளர்ச்சி – பிற்காலத்தில் வளம் நிறைந்த வாழ்வுக்குத்துணைபுரிவதாக அமைந்தது என நினைக்கிறேன்
பயம் அறியாத இளம் பருவத்தில் கவலை ஏதுமின்றி சிறகடிக்கும் சுதந்திரப் பறவைகள் போன்று சுற்றித் திரிந்தோம் .பனை , தென்னை மரத்தின் மீது ஏறுவது ஆபத்தானது என அறியாத பருவம். அப்பா அம்மா ஊரில் இல்லாதபோது கட்டுப்பாடற்ற தனிக்காட்டு ராஜாக்களாக நினைத்தபடி ஆடி ஓடித் திரிந்தோம்
_________________________________________________________________________
Christmas Carol Rounds
டிசம்பர் மாதம் வந்து விட்டாலே கிறிஸ்மஸ் கொண்டாட்டம் துவங்கிவிடும் பள்ளிக்கூடத்தில் யாவரும் கூடுவார்களா அல்லது சர்ச்சில் கூடுவார்களா என்பது சரியாக ஞாபகம் இல்லை.இரண்டு அல்லது மூன்று நாட்கள் தினமும் மாலையில் ஆரம்பித்து இரவுவரை வீடு வீடாகச் சென்று carol songs பாடுவார்கள் .அப்படிக் குழுவாகப் போய்ப் பாடுகிறவர்களுக்கு அந்தந்த வீடுகளில் cake , jam cheese அல்லது butter தடவிய bread slices மற்றும் பலகார வகைகள் கொடுப்பார்கள்.
Mr.Cook என்னும் English man உடைய பங்களா சிறு குன்று போல உள்ள உயரமான இடத்தில் தனியாக இருந்தது அங்கு செல்வதற்கான பாதையின் இரண்டு பக்கமும் சவுக்குச் செடிகள் வளர்ந்து சுவர் போல் இருக்கும்.அந்த தனியான பெரிய பங்களாவில் Mr.Cook அவர் மனைவி மற்றும் மகளுடன் இருந்தார்..அவரது வீட்டில் பூப்போன்று soft –ஆக இருக்கும் sponge cake கொடுப்பார்கள், அவர் குடும்பமாக church-க்கு Carol Service-க்கு வரும்போது lipstick மற்றும் perfume வாசனை கம கமவென்று சுற்றிலும் பரவி நிற்கும்..பெண்கள் frock Scarf, socks stockings அணிந்து ஸ்டைலாக வருவார்கள்.
Carol Rounds முடிந்தபின்பு அதில் கலெக்ட் ஆன தொகையில் வேறுஒரு நாளில் ஸ்பெஷல் டீ பார்டி நடத்துவார்கள் .Cake ,jam bread slices cheese biscuits மற்றும் தின்பண்டங்கள் டீவழங்குவார்கள் கிறிஸ்மஸ் காலம் முழுவதும் நடைபெறும் Christmas Carol Rounds, Carol Service ,Christmas tree ,Christmas Service கொண்டாட்டங்கள் அனைத்தும் மிகுந்த மகிழ்ச்சியை எங்களுக்குத் தந்தது
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
தோட்டம் போட்டது
Manapam Camp Church-ன் சுற்றுப்புறம் பனைமட்டைகள் மூலம் அமைக்கப்பட்ட வேலிவைத்து அடைக்கப்பட்டிருக்கும் தெற்கு நுழைவு வாசலில் துவங்கி சர்ச் வரை வலது புறத்தில் இந்த வேலி இருந்தது சர்ச்சின் முன்புறம் மூன்று சவுக்கு மரங்கள் இருந்தன,கிணற்றின் கீழ்ப்புறம் செக்ஸ்டனுக்கு ஒரு கூரை வீடும் ,அதன் வடக்குப் பக்கத்தில் செவ்வக வடிவத்தில் சுற்றிலும் வேலி அடைக்கப்பட்ட வீட்டுத் தோட்டத்திற்கான காலியிடமும் இருந்தன. இந்தக் காலியிடத்தில் பந்தல் அமைத்து ,அவரை, பாவை ,பீர்க்கை போன்ற படரும் தாவரங்களும் தரையில் படரும் பூசணியும் வளர்த்து வந்தோம்.விதைபோட்டு வளர்ப்பதற்கு முதலில் இடைவெளி விட்டு, குழி தோண்டி அதில் விதைஇட்டு ,நீர் ஊற்றி அது முளை விட்டு மேலே வருவதை தினமும் சென்று ஆவலுடன் பார்த்தோம். ஓணான் போன்றவைக் கடித்து சேதப்படுத்திவிடாதபடி பாத்தியைச் சுற்றி நெருக்கமான வேலி அமைத்தோம்.கொடிகள் ஓரளவு வளர்ந்து பந்தலில் படர ஆரம்பித்தன.தினமும் கிணற்றிலிருந்து தண்ணீர் இறைத்து பாத்திகளுக்கு நீர் ஊற்றினோம்.கொடிகளில் பூக்கள் தோன்றி ,பின்னர் பிஞ்சுகளாக காய்கள் தோன்றும் .தக்காளிச் செடியும் வளர்த்தோம் .மிளகாய் வெண்டை ,கத்தரிச் செடிகள் இருந்தன.இருக்கின்ற வசதியைக்கொண்டு சிறிய அளவில் வீட்டுத் தோட்டம் அமைத்து அதில் ஈடுபாடு காட்டி மகிழ்ச்சியை அறுவடை செய்தோம்.
____________________________________________________________________
பாம்பன் பாலத்தில் நடந்து சென்றது
நாங்கள் பயம் அறியாத பருவமாகக் கருதக்கூட்டியது எங்களது பள்ளிப்பருவம் ஆகும். “இளங்கன்று பயமறியாது“ என்ற பழமொழிக்கு எடுத்துக்காட்டாக பல சம்பவங்களைக் கூறமுடியும் .அதில் ஒன்றுபாம்பன் பாலம் என்ற கடல் பாலத்தில் நடந்து மறுமுனை வரை சென்று திரும்பியது ஆகும்.இரயில் செல்லாத நேரம் பற்றித் தெரிந்து போயிருந்தால் பரவாயில்லை. மற்றப்படி இப்படிப் போவது முட்டாள்தனமானதாகும்.ரயில் வந்தால் ஒதுங்கிக்கொள்ள பாலத்தில் பாதுகாப்பான இடங்கள் இடைவெளி விட்டு அமைக்கப்பட்டிருந்தன.இருந்தபோதிலும் பாலத்தில் நடந்து செல்வது மிகவும் ஆபத்தானதுதான். காலுக்குக் கீழே ஆழமான கடல்.கால் தவறினாலும் ,பலத்த காற்று அடித்தாலும் கடலுக்குள் விழும் ஆபத்து உண்டு. பலமுறை இவ்வாறு பாலத்தின் மேல் நடந்து திரும்பி இருக்கிறோம் ..வீட்டிலிருந்து கடற்கரை ஓரமாகவே பாம்பன் பாலம் ஆரம்பிக்கும் இடம்வரை நடந்து போவோம்.பாலம் துவங்கும் இடத்தில் ஒருபுறம் நடப்பதற்கென இரும்பு தகடுகள் போட்டிருக்கும்.மற்றப்படி தண்டவாளத்தின் குறுக்கே வரிசையாக வரும் ஸ்லீப்பர் கட்டைகள் நெல் நடக்கவேண்டும்.இது சிறுவர்களுக்கு ஆபத்தானதாகும்.பொதுவாக யாரும் இப்படி நடந்து செல்வதில்லை.துணிச்சல் உள்ளவர்கள் மட்டுமே கடந்து செல்ல நினைப்பார்கள். பாலமும் நீளமானதுதான். எனவே விடாமுயற்சி உடையோரே மறுமுனை வரை சென்று திரும்பமுடியும்
Climbing on tall trees
Mandapam Camp -ல் சிறுவராக இருந்த போது நாங்கள் நாலடி நாலரையடி உயரம்தான் இருப்போம் . . ஸ்பைனல் கார்ட் பாதிப்பு சிகிச்சைக்காக அம்மா மதுரையில் டாக்டர் கென்னெட் ஆஸ்பத்திரியில் இருந்தார்கள்.அப்பா மதுரை அல்லது Ramnad சென்று விடும்போது நாங்கள் தனியாக வீட்டில் இருப்போம் ,வீட்டிற்கு எதிரில் இரண்டு வேப்பமரங்கள் இருந்தன. அதில் ஏறி கூரைக்குப் போவோம் . .கல்லறைத் தோட்டத்தைத் தாண்டி கடற்கரை திசையில் fence -ஐ ஒட்டி நின்ற பனை மரத்தில் ஓலை மட்டைகள் வெட்டப்படாமல் மேலே செல்ல வழி இராது. அந்த மரத்தில் ஒவ்வொரு மட்டையாக ச் சுற்றிச் சுற்றி ஏறி உச்சிக்குப் போவோம். மணிக் கூண்டில் இரும்பு ஏணி வழியே ஏறி மணி இருக்கும் இடத்திற்குப் போவோம். சர்ச் காம்பவுண்டின் எல்லை ஓரமாக பல பனை மரங்கள் சுற்றிலும் இருந்தன அவற்றில் பயமில்லாமல் ஏறி உச்சிக்குப் போய்விடுவோம். அங்கிருந்து இறங்க பயமாக இருக்கும். வெட வெட என கால்கள் நடுங்கும். எப்படியோ மெதுவாக இறங்கிவிடுவோம்.அதுபோல் தென்னை மரத்திலும் ஏறி உச்சிக்குப்போய் உட்காருவோம்.தேங்காய் ,இளநீர் பணம் பழம் பறிப்பதுண்டு. church -ஐ ஒட்டி இருந்த வேப்ப மரம் roof -ஐ த் தொடும் . எந்தமரமானாலும் உயர ஏறி உச்சிக்குப்போவது எங்களுக்கு இஷ்டமாக இருந்தது.
Earliest Memories
மிக மிக முந்தைய நினைவுகள்:
வயதோ, ஆண்டோ துல்லியமாகத் தெரியவில்லை. ஐந்து வயதிருக்கலாம். 1947 - ஆம் வருடம் என்றிருக்கலாம். அப்போது பெரியம்மா OCPM பள்ளியில் வேலை பார்த்திருக்கிறார்கள். Capron Hall School பெயரும் கூறக்கேட்டிருக்கிறேன். பெரியம்மா, பள்ளி Compound அருகில் வீடெடுத்து இருந்தார்கள். நாங்கள் இருவரும்( Jeyaraj -ம் நானும்) அவர்களுடன் அவ்வீட்டில் தங்கி OCPM பள்ளியில் படித்தோம். ( அப்போது அம்மா Spinal cord பாதிப்பு க்கு Kennette Hospital - லில் admit ஆகி இருந்தார்கள். அப்பா Mandapam Camp ல் Pastor - ஆக இருந்தார்கள். அம்மா படுத்திருந்த verandah உள்ள கட்டிடத்தின் நுழைவுவாயில் இறக்கை விரித்த கிளி உருவத்தில் இருந்தது. கிளியின் உடல் பச்சை வண்ணமும், அலகு சிவப்பு வண்ணமும் கொண்டிருந்தது.)
School Fence -ஐத் தாண்டி வீடு இருந்தது. வீட்டிலிருந்து எதிரே நடந்து சென்று fence- ஐத் தாண்டி பள்ளிக்கூடம் போவோம்.)
Kennette Hospital க்குப் போவதற்கு Madurai Junction Railway Station அருகே TELC Church, Central Bus Stand இவற்றிற்கு இடையே செல்லும் ரோட்டில் போகவேண்டும். Railway track - ஐக் கடப்பதற்காகப் பாலம் சரிவுடன் ஏறி வலதுபுறம் இறங்கும். Kennette Hospital பகுதிக்கு பாலத்தில் உயரத்திலிருந்து படிகள் வழியாக கீழே இறங்க முடியும். Over bridge-ன் அடியில் திருநெல்வேலி, இராமநாதபுரம் செல்லும் இரண்டு ரயில்பாதைகள் உண்டு. நாங்கள் இருவரும் Kennette Hospital சென்று அம்மாவைப் பார்க்கும் நேரங்களில், இந்தத் தண்டவாளம் அருகே சென்று காலணா, அரையணா, ஓட்டைக் காலணா போன்ற நாணயங்களைத் தண்டவாளத்தில் வைப்போம். மதுரை Railway Station -ல் இருந்து பல நேரங்களில் என்ஜின் மட்டும் Shunting-ல் அங்கும் இங்கும் சென்று வரும் அப்போது தண்டவாளத்தில் வைக்கப்பட்ட காசுகள் நசுங்கித் தகடுகள் போல் மாறும். ( இந்த விளையாட்டு பின்னாட்களில் வேறு ஊர்களிலும் தொடர்ந்துள்ளது. மண்டபம் கேம்பிலும், திருச்செந்தூரிலும் train வரும்போது தண்டவாளத்தில் சிறுகல் மற்றும் சிறு பொருட்களை வைத்து அவை நசுக்கப்படுவதைக் கண்டு மகிழ்வதுண்டு.)
பசுமலையில் அந்தக் காலத்திலேயே (1940-களில்) Love Divine என்ற திறந்தவெளி நாடகக் காட்சிகள் Lent Season -ல் நடைபெறும். ஐந்து வயது சிறுவர்களாக இருந்தபோது நாங்கள் (Jeyaraj - ம் நானும்) அதைப் பார்த்துள்ளோம். அதில் ஏசு கிறிஸ்துவைச் சாட்டையால் அடிப்பதைப்போன்று வீட்டில் வந்து imitate செய்துள்ளோம். Lazarus - ஐ உயிருடன் எழுப்பும் காட்சியை Bible Cinema வில் காட்டும் போது பார்த்துள்ளோம். அக்காட்சிகள் இன்னும் ஞாபகத்தில் உள்ளன.
பெரியம்மாவுடன் அவர்கள் வீட்டில் சிறுவர்களாக இருந்த போது நடந்தவை நினைவில் உள்ளன. ஒரு முறை Quinine மருத்துக்குட் பதிலாக பினைல் குடித்துவிட்டேன். Doctor - இடம் கூட்டிச்சென்று மாற்று மருந்து கொடுத்தார்கள்
கடலை மிட்டாய் வீட்டிலேயே செய்வோம். வெல்லப்பாகு காய்ச்சி, நிலக் கடலை கலந்து தட்டில் பரப்பி ஆற வைத்து சிறு துண்டுகளாக வெட்டி தயாரிப்பார்கள். வீட்டில்
|ce Cream செய்வதற்காக ஒரு சிறு கருவியைச் சுழற்றி, அதன் மூலம் குளிரச்செய்து |ce Fruit செய்த ஞாபகம் உள்ளது.
OCPM பள்ளியில் First Standard படிக்கும் போது ஒல்லியான அழகான teacher இருந்தார்கள். சிறு குழந்தைகள், அன்பான ஆசிரியைகள் பால் ஈர்ப்பும் ஈடுபாடும் கொள்கின்றனர். விளையாட்டு, பாட்டு, கதை மூலம் சிறு குழந்தைகளை இளம் ஆசிரியைகள் கவர்ந்திட முடியும்.
மதுரையில் பள்ளிப் படிப்பின் துவக்கம் நிகழ்ந்துள்ளது. சிறு வயதில் நடந்தவை முழுவதுமாக நினைவில் இல்லை. 1st Std , 2nd Std மதுரையில் படித்திருக்க வேண்டும். 3rd Std முதல் ESLC வரை Mandapam Camp -ல் படித்தோம்.புதூரில் Johny மாமாவின் அம்மா ஒரு வீட்டில் இருந்தது லேசாக ஞாபகத்தில் உள்ளது. Dr.Kennette அவர்கள் பெரியம்மாவுக்கு friend ஆக இருந்திருக்க வேண்டும். நாங்கள் இருவரும் Kannette Hospital - லில்தான் பிறந்துள்ளோம். (1942) ESLC படித்தபோது அம்மா Mandapam Camp வீட்டிற்கு வந்து விட்டார்கள்.
1942 June 20-ம் தேதி நானும், Jeyaraj -ம் பிறந்தோம்.சத்தி February 18, 1945-ல் பிறந்தான். Nirmala 1947, July 17-ல் பிறந்தாள்.நிர்மலா பிறந்தபின்பு தான் அம்மா Dr.Kennette Hospital - லில் admit ஆகி படுத்தவாறே treatment எடுத்துள்ளார்கள். சிறு வயதில் தாயைப் பிரிந்து அப்பாவின் பராமரிப்பில் நாங்கள் வளர்ந்துள்ளோம். இப்பிரிவு பற்றி அப்போது துயர உணர்வு எதுவும் எங்களுக்கு இருந்ததில்லை.அம்மாவை மதுரையில் Kennette Hospital சென்று பார்த்து விட்டு Mandapam Camp திரும்பும்போது பிரிந்து போவது குறித்து சஞ்சலம் அடைந்ததில்லை. சோக உணர்வு எதுவும் ஏற்பட்ட நினைவு இல்லை பிஞ்சு நெஞ்சில் பிரிவுத் துயர் இடம் பெறவில்லை. கண் கலங்கியதில்லை. துன்ப துயரங்களை உணரும் உள்ளம் எங்களுக்கு இல்லாமல் இருந்ததுவே காரணம் .இளங்கன்று பயமறியாது என்பது போன்றே இளமையில் நெஞ்சில் துயர எண்ணங்கள் எழுவதில்லை. போலும். ஆனால் சினிமாவில் வரும் சோகக் காட்சிகளைப் பார்த்தால், புத்தகங்களில் துயரக் கதைகளைப் படித்தால் கண்கலங்குபவர் உண்டு. பொதுவாக துயரம் எனக்குப் பிடிக்காது. மனம் அதைத் தாங்காது.
__________________________________________________________________________
படிப்பும், நடிப்பும் போட்டிகளும்
பதிமூன்று வயது வரை Mandapam Camp -ல் அப்பா, அம்மாவின் நேரடிக் கட்டுப்பாடு இல்லாமல் தான் வளர்ந்தோம். அம்மாவுக்கு Spinal cord பாதிக்கப்பட்டிருந்ததால் மதுரையில் Dr.Kennette Hospital - லில்படுத்த நிலையில் குறைந்தது நான்கு வருடங்கள் இருந்தார்கள். அப்பாவுடன் நாங்கள் நால்வரும் Mandapam Camp -ல் இருந்தோம். சில நாட்கள் அப்பா வேலை காரணமாக இராமநாதாரம், மதுரை சென்று விடுவார்கள். நாங்கள் இருவரும்(Jeyaraj - ம் நானும்) எங்கள் மனம் போல் ஓடி ஆடித்திரிந்தோம். சுற்றினோம். ஆனால் படிப்பு எங்களுக்குப் பிடித்தவொன்றாக, சுலபமானதாக இருந்தது.. வகுப்பில் முதலிடம் பெறும் வண்ணம் நன்கு படித்து வந்தோம். Jeyaraj - ம் நானும் இரட்டைப் பிள்ளைகள் என்பதால் யாவருக்கும் எங்களைப் பிடித்திருந்தது. Identical twins என்பது அதிசயமாக இருந்தது. இருவரும் அடையாள வேறுபாடு தெரியாதவாறு ஒன்று போல இருப்போம். யார் ஜெயராஜ், யார் மங்களராஜ் என்று ஆசிரியர்களுக்கும் உடன் படித்து வந்த மாணவருக்கும் தெரியாது. பள்ளி ஆண்டு விழாவில் ஆங்கில நாடகம் நடிக்க எங்களைச் சேர்த்துக் கொள்வார்கள். பேச்சுப் போட்டியிலும் கலந்து கொண்டுபரிசு வாங்கியுள்ளோம். 'பளிங்குச்சிலை' என்ற சிறு கதைப் புத்தகத்தைப் பரிசாகப் பெற்றிருக்கிறேன். பெரியம்மா ஆறாவது வகுப்பில் English Grammar சொல்லிக்கொ டுத்ததால் அடிப்படை வலுவாக அமைந்தது. ஆங்கிலத்தில் சொந்தமாக எழுதுவதற்கு பின்னாளில் எளிதாக அமைந்தது. சின்ன வாத்தியார் என்று அழைக்கப்பட்ட குப்பு சாமி Sir வாய்ப்பாடு பாராமல் படிக்க வைத்தார். கணக்கு விருப்பமானதாக இருந்தது.
__________________________________---------------------------------------------------------------____
பாம்புகள் பற்றி:
Mandapam Camp -ல் Church compound -ன் உள்ளே பாம்புகள் நடமாட்டம் உண்டு. முள்வேலி, பனைமரங்கள் மற்றும் கிணறுகளில் பாம்புகள் அவ்வப்போது காணப்படுவதுண்டு. சில பாம்புகள் விஷமுள்ளவை. நல்ல பாம்பு, கட்டுவிரியன், கொம்பேறி மூர்க்கன் விஷப்பாம்புகள் ஆகும். தண்ணீர் பாம்பு விஷமற்றது. பச்சையான இலை தளைகள் உள்ள இடம் மற்றும் முருங்கை மரக்கொப்புகளில் பச்சைப்பாம்பு எளிதில் கண்ணுக்குத் தெரியாதபடி ஊர்ந்து செல்லும். பச்சைப்பாம்பு அதன் முட்டைகளைச் சுற்றிப் படுத்திருக்கும்.
சில சமயங்களில் பாம்புகளைக் கம்பால் அடித்துக் கொன்றுள்ளோம். ஆபத்து மிக்க செயல்களை அச்சமின்றி செய்துள்ளோம். கிணற்றுக்குள் இறங்க முயற்சித்துள்ளோம். கடலில் கரையோரம் விளையாடியுள்ளோம்.
_________________________________________________________________________
திறந்த வெளியில் சமையல்
தனியாக நாங்கள் மட்டும் வீட்டில் இருக்கும் சமயங்களில் பல வகைகளில் பொழுது போகும். சில நேரங்களில் கிடைக்கும் பொருள் கொண்டு திறந்த வெளியில் சமையலில் ஈடுபடுவதுண்டு. மூன்று கற்கள் வைத்து அடுப்பு உண்டாக்கி, அதன்மேல் மண்சட்டி வைத்து, கீழே விறகுக்காக தென்னை ஓலை, பனை ஓலை மற்றும் சிறு சிறு சுள்ளிகள் பயன்படுத்துவோம். சுள்ளிகளில் தீயைப் பற்ற வைத்து எரிப்போம்.முருங்கைக்கீரையை உருவி, சட்டியில் தண்ணீர் ஊற்றி வேகவைப்போம். நண்டு கொதிக்து நீர் வற்றி, கீரை வெந்ததும் பட்ட மிளகாயை எண்ணெயில் போட்டுக் கிண்டி, அதனுள் அவித்த கீரையைக் கொட்டி, கிண்டி உப்பு போட்டு இறக்கு வோம். அப்படியே கீரையைச் சாப்பிடுவோம். அது ருசியாக இருக்கும்.
சின்ன வயதில் பிறர் செய்வதை அப்படியே பின்பற்றுவது சரியா, தவறா என்று கேட்டு நடைபெறுவதில்லை. மற்ற சிறுவர்கள் செய்தவற்றை நாமும் செய்தால் என்ன என்று நினைத்து செய்தது நினைவில் உள்ளது. சிட்டுக்குருவியை Catapult - ஆல் வீழ்த்தி, அதன் முடியை தோலோடு அகற்றி மிஞ்சிநின்ற சிறிய அளவிலான கறியை மிளகாய்பொடி தடவி, சட்டியில் எண்ணெய் ஊற்றி, அடுப்பில் தீ மூட்டி வறுத்துச் சாப்பிட்டுள்ளோம். அது போன்றே அணில் கறியும் தவறு என அறியாமல் பொரித்துச் சாப்பிட்டுள்ளோம்.இப்படியான சமையல் திறந்த வெளியில் நாங்கள் ஈடுபட்ட செய்ததாகும் வெளிப்புறத்தில் அடுப்பு மூட்டி சமையல் செய்தது இனிமை தரும் நினைவாக உள்ளது.
நாடகத்தில் பங்கு பெற்றது:
Mandapam Camp பள்ளியில் படித்த போது குறைந்தது இருமுறையாவது பள்ளி ஆண்டு விழாவின்போது நாடகத்தில் பங்கு பெற்ற ஞாபகம் உள்ளது. அதில் ஒரு நாடகம் ஆங்கில நாடகம். டெய்லர் 'வெட்டுவேன்' (Cut) என்ற வார்த்தையைப் பயன்படுத்திப் பேசுவதை, போலீஸ்காரர்கள் கொலை செய்யப் போவதாக எடுத்துக்கொண்டு செயல்படும் கதை அமைப்பு அந்த நாடகத்தில் வரும். அந்தக் காலத்தில் போலீஸ்காரர்கள் சிவப்புத் தொப்பியும், காக்கிச் சட்டை மற்றும் காக்கி அரைக்கால்சட்டையும் அணிவார்கள். இது போன்ற உடை அலங்காரம் செய்து நடிப்போம்.
Christmas சமயத்தில் ஏசு கிறிஸ்துவின் பிறப்பு காட்சி, ஆடு மேய்ப்பவர், வான சாஸ்திரிகள், தேவதூதர்கள், ஜோசப், மேரி, குழந்தை என Church -ன்
வெராண்டாவில் தென் பகுதியில் காட்டப்படும். அதில் ஒவ்வொரு வருடமும் பங்கு பெற்றுள்ளோம்.இப்படி Church -ல் நடத்தப்படும் Christmas Nativity Scenes - ஐ கிறிஸ்மஸ் சமயத்தில் மாலை நேரத்தில் Church Congrecation யாவரும் கலந்து கொண்டு பார்த்து மகிழ்வார்கள். Church -ல் Christmas Tree நிகழ்ச்சி மகிழ்ச்சி தரும் மற்றொரு நிகழ்ச்சியாகும். இது Christmas வாரத்தில் நடைபெறும். Lucky Dip என்ற முறையில் ஒரு டப்பாவுக்குள் சுருட்டிப் போடப்பட்டுள்ள சிறு துண்டு காகிதங்களில் எண்கள் எழுதப்பட்டிருக்கும். இது சிறு குழந்தைகளுக்கான நிகழ்ச்சி. ஒவ்வொரு குழந்தையாக அழைக்கப்படுவர். அக்குழந்தை டப்பாவிலிருந்து ஒரு சீட்டை எடுத்திட அதில் வரும் எண்ணுக்கான பரிசுப்பொருள் அதற்கு வழங்கப்படும். அதிர்ஷ்டத்தைப் பொறுத்து விலை அதிகமுள்ள பொருள் எடுக்கப்படும் சீட்டின் அடிப்படையில் கிடைக்கும்
________________________________________________________________-_________________---___________________-
Catapult செய்தல்
நானும் ஜெயராஜும் 7 வயது முதல் 13 வயது முடிய மண்டபம் கேம்பில் இருந்த நாட்கள் மறக்க முடியாதவை. அம்மாவைப் பார்க்க அப்பா மதுரை போவார்கள். சில சமயம் இராமநாதபுரம் போவார்கள். நாங்கள் நான்கு பேர் மட்டும் தனியே இருப்போம். பள்ளிக்கு விடுமுறை எனில் நாங்கள் இருவரும் நாள் முழுவதும் இஷ்டப்படி சுற்றுவோம். மற்றப்படி மாலை நேரங்களில் விருப்பமானவற்றைச் செய்வோம். Catapult நாங்களே தயார் செய்வோம். Y - வடிவில் உடை மரத்தின் கிளையை வெட்டி எடுப்போம். Cycle tube அல்லது வேறு Rubber -ல் Catapuet - க்குத் தேவையான இரண்டு rubber strips - ஐ வாங்குவோம். 3 அல்லது 4 அங்குல நீளம், 1 அங்குல அகலமுள்ள leather piece-ம் எடுத்துக்கொள்வோம். leather piece-ன் நுனிகளில் இரு துறைகள் போட்டு, அத்துளைகளில் தனித்தனியாக இரண்டு Rubber strip -ன் நுனிகளை விட்டு மடக்கி rubber strings மூலம் கட்டுவோம். Rubber Strips -ன் மற்ற இரண்டு நுனிகளை Y - வடிவ உடை மர கவட்டையில் தனித்தனியே rubber band கொண்டு இறுக்கமாகக் கட்டுவோம் இப்போது Catapult பயன்பாட்டுக்குத் தயார். அணில், ஓணான், குருவி முதலியவற்றைக் குறிபார்த்து Catapult-ல் கூழாங்கல் அல்லது ஜல்லிக் கல்லை Leather piece -ல் வைத்து அழுத்திப் பிடித்துக் கொண்டு, Y- வட வ கவட்டையை இடதுகையில் பிடித்துக் கொண்டு, வலது கையால் rubber strips - ஐ நன்கு இழுந்துவிட்டுவிட்டால் கல் விடுபட்டுப் பறந்துசென்று குறியைத் தாக்கும்.
An Adventure
அம்மா மதுரை Dr.Kennett Hospital - லில் படுத்தபடியே treatment - ல் இருந்தபடியால் நாங்கள் அப்பாவுடன் Mandapam Camp -ல் தனியாக இருந்தோம். அப்பாவும் சில நாட்கள் Ramnad, Madurai சென்று விடும் போது, நானும் Jeyaraj -ம் இஷ்டம் போல் சுற்றுவோம். எல்லாம் செய்வோம்.
கடற்கரை பக்கம் உள்ள வேலியை ஒட்டி இரண்டு கிணறுகள் இருந்தன. ஒன்றில் சரிவான பாதை மூலம் நடந்து சென்றே நீர் அள்ளலாம். மற்ற கிணற்றில் ஆறு முதல் பத்து அடி ஆழத்தில் தண்ணீர் இருக்கும். ஒரு நாள் இக்கிணற்றினுள்ளே ஆறு அடி பாம்பு தண்ணீரில் தலையைக் காட்டிக்கொண்டிருந்தது. Church Vestry -யில் ஒரு முனை தூண்டில் முன் போன்ற கூர்மையான பகுதியும் மறு முனையில் வளைந்த பகுதியும் உடைய எட்டு அடி நீளமான இரும்புக் கம்பி இருந்தது. பாம்பைப் பார்த்தவுடன் அந்தக் கம்பியை எடுத்து வந்து, கிணற்றின் மேலிருந்தவாறே பாம்பின் தலையில் அந்தக் கம்பியால் குத்தினோம். கிணற்றின் பாறையின் மேல் பாம்பின் தலையைச் சேர்த்து அழுத்திப் பிடித்துக்கொண்டோம். பாம்பு வால் மற்றும் உடலை வளைத்து அடித்து அடித்துவிடுவித்துக் கொள்ள முயன்றது. கம்பியை விடாமல் அசையாமல் நீண்ட நேரம் பிடித்துக் கொண்டோம். முடிவில் பாம்பு அசையவில்லை.. அது செத்திருக்கவேண்டும். ஞாபகம் இல்லை. கம்பியின் துணி தூண்டில் முள் போன்று இருக்க கால் அப்படியே பாம்புடன் கம்பியை வெளியே தூக்கினோம். (வெளியே எடுத்த பின்பும் பாம்பு உயிருடன் இருந்திருத்தால் அடித்திருப்போம். சரியாக நினைவில்லை. பாம்பினைத் தைரியமாகத் தாக்கிக் கொன்றுவிட்டது மறக்க முடியாத adventure ஆகும்.
விழாவில் வருகை தந்தவருக்கு Tea வழங்கியது:
Mandapam Camp Church - ல் ஒரு மாலை நேரம் ஏதோ விழாவுக்காக வந்தவர்களுக்கு Tea வழங்கும் திட்டம் இருந்தது. அப்பொறுப்பினைச் சிறுவர்களான நானும் Jeyaraj -ம் ஏற்றுக்கொண்டோம். டீ தயாரிப்பதற்கு கெட்டிலில் வெந்நீர் கொதிக்கவைக்க Power House சென்று சிறிதளவு நிலக்கரியை (காக்கா முட்டை திரைப்படத்தில் வருவது போல்) யாருக்கும் தெரியாமல் அள்ளி வந்தோம். டீத் தூளைப் போட்டுவிட்டு டிக்காஷன் இறங்கியதும், வடிகட்டி பின்பு பால்,ஜீனி கலந்து கலக்கி டீ தயாரித்தோம். எப்படி இந்தப் பொறுப்பை அப்பா சிறுவர்களான எங்களுக்கு அளித்தார்கள் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. வீணான பதட்டம் அடையாமல் முழு நம்பிக்கை வைத்திருக்க வேண்டும். டீ தயார் செய்ததுடன் அதனை அனைவருக்கும் டம்ளர்களில் ஊற்றி விநியோகித்ததும் நாங்கள் இருவர் தான்
________________________________________________________----------------------_____-_-___________________________________________--------------------------------
கார்த்திகை தீப தீப்பொறி சுற்றுதல்
Mandapam Camp -ல் 1955 வரை நாங்கள் இருந்தோம்.எனக்கும் ஜெயராஜுக்கும் பதிமூன்று வயது ஆகும். வரை - ESLC வகுப்பு படித்து முடிக்கும் வரை - Mandapam Camp வாழ்க்கை துள்ளித்திரியும் பள்ளிப் பருவத்து வாழ்க்கையாகும். மறக்க முடியாத பல நினைவுகள் நிறையக் கொண்டதாகும்.
கார்த்திகை மாதத்தில் குறிப்பாக கார்த்திகை தீபம் என்று கொண்டாடப்படும் நாளில் ஊர் முழுதும் மகிழ்ச்சி வெள்ளம் கரை புரண்டோடும்.அன்று மாலை நேரம் முதலே கொண்டாட்ட உணர்வு தென்படத் துவங்கி விடும். கோபுரம் போல் எழுப்பப்பட்டிருக்கும் 'சொக்கப்பனையில்' தீயைப் பற்ற வைத்து அது கொழுத்து விட்டு எரியும். உச்சி வரை முழுதும் எரிந்து முடிவதைச் சுற்றி நின்று மக்கள் கூட்டம் கண்டு களிக்கும். இப்படிச் செய்வதற்கு மதம் சார்ந்த ஐதீகம் காரணமாகும். மத்தாப்பு பொறி போல தீப்பொறி சிதறிவிழும்படி சிறுவர்கள் மகிழ்ந்து விளையாடும் ஒரு நிகழ்வு நடக்கும். பனைமரத்தில் தூங்கு தோன்றும் முன்பு, அதன் பூவாகக் கருதக் கூடிய பாகத்தை உலர வைத்து மண் குழிக்குள் போட்டு அதனுடன் நெருப்புக் கங்கையும் இட்டு அது புகைந்து முழுவதுமாக எரியாமல் கரிந்து நிற்கும். அதைப் பொடியாக்கி உப்பையும் சிறிது சேர்த்து, சிறு துணிப்பை களில் பொட்டலங்களாகக் கட்டுவார்கள். ஒரு பொட்டலத்தை கனத்த கயிற்றில் கட்டி, அதில் தீக்கங்கை வைத்து மறு துனியைக் கையில் பிடித்தபடி விரைந்து சுற்றும் போது மத்தாப்பு போன்று தீப் பொறிகள் சிதறி விழும் காட்சி சிறுவர் சிறுமிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கும்.
__________________________________-------_______________
Cycle ஓட்டப் படித்தது
Mandapam Camp -ல் ஆறாவது வகுப்புப் படிக்கும் போது நானும் ஜெயராஜும் Gycle ஓட்டக் கற்றுக் கொண்டோம். பின்னால் வந்து Cycle - ஐப் பிடித்து ஓட்டுவதற்கு யார் சொல்லிக்கொடுத்தது என்பது ஞாபகத்தில் இல்லை. Mandapam Camp இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் இருந்ததால், உள்ளே Cycle கடை எதுவும் கிடையாது. Railway Stationக்கு மறுபுறம், தண்டவாளங்களைத் தாண்டி கடைகள் இருக்கும். (அந்தக் காலத்தில் அரசியல் கூட்டங்கள் கடைகள் முன்னிருந்த சிதறிய மைதானத்தில் நடைபெறும). Cycle - ஐ வாடகைக்குத் தரும் கடையில் Cycle - ஐ எடுத்து Mandapam Camp உள்ளே கொண்டு வந்து ஓட்டப்பழகுவோம். எங்கள் வகுப்பு நண்பன் சாந்தாராமும் சில நேரம் சேர்ந்து ஓட்டுவதுண்டு. Cycle ஓட்டுவது சிறு வயதில் மிகவும் மகிழ்ச்சி தந்தது. Cycle -லில் ஏறுவதற்கு, இறங்குவதற்கு, ஒரு கையை அல்லது இரண்டு கைகளையும் விட்டு விட்டு ஓட்டுவதற்கு முதலில் தெரியாது. பின் ஒவ்வொன்றாக பழகிட முடிந்தது.
__________________________________________----____
கோயில் கட்டி, கும்பாபிஷேகம் செய்தது
Mandapam Camp -ல் கரீம் கடை, பக்கத்து டீக்கடை எதிரில் உள்ள ரோட்டின் நடுவில் அரசமரம், வேப்ப மரம் இருந்தன. அதில் சிறிய சிலை வைத்து சாமி கும்பிட்டனர். பிறகு புதிதாக ஒரு பிள்ளையார்(?) கோயில் கட்டும் திட்டம் போட்டு கொஞ்சம் கொஞ்சமாக வேலைகள் நடைபெற்றன. சுற்றுச் சுவரிலும், கோயில் நுழை வாயிலிலும் சிலைகள், சிற்பங்கள் செய்யப்பட்டு வைக்கப்பட்டன. கோயிலின் முகப்பில் கோளவடிவ கோபுரம் எழுப்பப்பட்டது. சிவப்பு அரக்கு போன்ற ஒன்றைப் பயன்படுத்தி வேலை நடந்தது. நாங்கள் இருவரும் பள்ளி முடிந்ததும் கோயிலில் கட்டுமான வேலை நடைபெறுவதைத்தினமும் சென்று பார்த்துவிட்டு வீட்டிற்குப் போவோம், முழு வேலையும் முடிந்த பின் ஒரு நாள் கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது.
____________________________________________________________________
பள்ளித் தோழன் V.T.சாந்தாராம்
Mandapam Camp - ல் ESLC வகுப்பு வரையிலும், பின்பு இரண்டு ஆண்டுகள் கழித்து இராமநாதபுரம் Schwartz High School-ல் Sixth Form என்றழைக்கப்பட்ட Eleventh Standard (SSLC) வகுப்பிலும் எங்கள் இருவருடைய Classmate - ஆக Shantharam இருந்ததை மறக்க முடியாது. Mandapam Camp -ல் சில நேரம் Cycle ஓட்டப் பழகும்போது Shantharam வருவதுண்டு. விடுமுறை நாட்களில் சில நாட்கள் எங்கள் Campus - க்கு வந்து பொழுதைக் கழிப்பதுண்டு. கடற்கரைக்குச் சென்று விளையாடுவோம். அவனது brother Rajasekaran ஆகும். சிவப்பு நிறம் கொண்டு, நடு உச்சி எடுத்து கருணாநிதி போன்று தலை சீவி இருப்பான். தலைமுடி curly ஆக இருக்கும். SSLC படிக்கும்போது Boarding பக்கம் ஒரு நாள் வந்து நண்பகல் குளத்திலிருந்து திரும்பும் போது பசி மயக்கம் காரணமாக பேசியது கேட்கவில்லையா என்றான்.
SSLC ஆங்கில பாடத்தில் Great Expectations என்ற Charles Dickens Novel Non - detailed Study - க்கு இருந்தது. All India Radio - வில் அதன் ஒலிபரப்பு கேட்க அவனது வீட்டிற்கு அவனது Cycle - வில் கூடப் போனேன். SSLC முடித்த பின்பு அவன் polytechnic -ல் சேர்ந்து, TANSI யில் வேலைக்குப் போனான்.
1975 - ஆம் வருடம் நான் (FIP) Faculty Improvement Programme - ல் Chennai Ramanujan Institute - ல் சேர்ந்து, Marina - வில் Post Graduate Hostel-லில் தங்கிய போது ஒரு நாள் அவன் வீட்டில் விருந்து கொடுத்தான்.நானும் PG. Hostel - லில் இரவு சாப்பாட்டுக்கு அழைத்து Chicken kuruma, சப்பாத்தி, Bread கொடுத்தேன். Mount Read - ல் TANSI யில் அவன் வேலை முடிந்துவந்த போது என்னை அடையாளம் கண்டு, சந்தித்து, வீட்டிற்கு அழைத்துப் போனான். பைகிராப்ட்ஸ் ரோட்டில் பல குடித்தனங்கள் இருந்த சிறிய வீட்டில் இருந்தான். என் மூத்த மகள் Usha, 8 th Dr.Subbarayan Street-ல் இருந்தபோது சூளை மேடு பக்கத்தில் இருந்த அவனது சொந்த வீட்டிற்கு நடந்தே சென்று அவன் குடும்பத்தினரைப் பார்த்தேன். பேரப்பிள்ளைகளுக்கு நிறைய வாங்கிப் போட்டு மகிழ்விப்பதுதான் நமக்கு மகிழ்ச்சி தரும் என்று கூறினான். Ramanathapuram வந்த புதிதில் (2003-ல் ) Shantharam brother Vijayakumar வீட்டை விசாரித்து அங்கு போனேன். Shantharam Ramanathapuram வந்திருந்த போது எங்களது வீட்டிற்கு வந்து பார்த்துச் சென்றான். இளம்பருவத்து பள்ளித்தோழன் நினைவுகள் என்றும் இனியவை ஆகும்.
_____________________________________________
Mandapam Camp -ல் நாடகம், கலை நிகழ்ச்சிகள்
Mandpam Campல் இலங்கை அரசின் பணியில் சுமார் 200(?) குடும்பங்கள் இருந்தன. அவர் தம் குடும்பத்தினர் எல்லாம் சேர்த்து 1000 பேர் இருந்திருக்கலாம். பள்ளியில் நடைபெறும் ஆண்டு விழா, Sports மற்றும் விருத்தினர் வருகையின்போது சிறப்பு நிகழ்ச்சிகள் போன்ற -( மக்கள் கலந்துகொண்டு மகிழ்ச்சி பெறும் ) நிகழ்ச்சிகள்-அவ்வப்போது நடைபெறும்.கிருபானந்தவாரியார், அழகப்பச் செட்டியார் இலங்கை செல்லும் வழியில் Mandapam Camp வந்து, quarantine Checkup - க்காகத் தங்கி நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள். இலங்கை தூதர் V. V - Giri ஒரு முறை வந்தார்.
இலங்கையரசின் பணியிலிருந்த சிங்கள |அலுவலர் (A.0) -க்கு நாடகத்தில் பங்கேற்று நடிக்க ஆர்வம் இருந்தது. Mandapam Camp - ல் பணியிலிருந்த மணி என்பவருக்குக் கதாநாயகனாக நடிக்கும் ஆசை மிகவும் இருந்தது. நாடகத்தை நடத்துவதற்கு திறந்த வெளி அரங்கம் ஒன்று நிறுவப்பட்டது. அதற்கு முன்னர் பள்ளிக் கட்டிடங்களில் தான் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளாக ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை, மயிலாட்டம் போன்றவை நடைபெற்றுள்ளன.
' அமலோற்பவ மேரி ' என்ற நாடகம் திறந்த வெளி கலை அரங்கில் நடந்தது. அதில் நடிக்க மதுரையிலிருந்து ஒரு நடிகையை அழைத்து வந்திருந்தார்கள். வண்ண focus lights, அடுக்கடுக்கான திரைகள் பயன்படுத்தினர். 1950 -களில் பெண் பாத்திரத்தை ஒரு ஆணே போடுவார். orchestra வைத்து விமரிசையாக நாடகம் நடத்தப்பட்டது. AO-வும் நடித்தார் காட்சிகள் மாறும்போது திரைவிழும்.பின் சுருண்டு மேலேறும்.
____________________________________________
Scouts in School.
Mandapam Camp school - லில் படித்த போது 6-வது வகுப்புக்கு மேல் Mr.M.T. Chelliah Sir வகுப்பு எடுத்திருக்க வேண்டும். அவர் Scouts Master ஆகவும் இருந்தார். Red Cross Society பற்றியும் எங்களுக்குப் பயிற்சி தரப்பட்டது.
"செஞ்சிலுவைச் சங்கம்
ஜெகம் புகழும் சங்கம்
சேவை செய்வோம், வாரீர்
சேவை செய்வோம் வாரீர்" என்று பாடவும் கற்றோம். Scouts பயிற்சியின் போது First Aid பற்றி அறிந்தோம். பல வகையான முடிச்சுகள் பற்றி செயல்முறை விளக்கத்துடன் கற்றுத்தரப்பட்டது. Mr. Chelliah Sir தான் விளக்கமாகச் சொல்லிக் கொடுத்தார். Reet knot,, Clove hitch,BowLine, Sheet Bend, Sheepshenk என பல வகை முடிச்சுகளைப் போடுவதற்குக் கற்றோம். இரண்டு குச்சிகளைச் சேர்த்துக்கட்டுவதற்கு எந்த முடிச்சு போடவேண்டும், அதை எப்படிப்போட வேண்டும் எனவும் அறிந்துகொண்டோம்.; செய்து கற்றோம்.
SIGNS ஏன் தேவை அவை எதைக் குறிப்பதற்குப் பயன்படுத்தப்படுகின்றன, ஏன் பயன்படுத்துகிறோம் என்பதை எல்லாம் கற்றுக் கொண்டோம். ஒவ்வொரு மாணவனுக்கும் Scouts Badge கொடுக்கப்பட்டது. Kakki Colour uniform அணிந்தோம். Scarf -ஐக் கழுத்தில் கட்டினோம். 6 அடி நீள Staffs (மூங்கில் கம்புகள்) பள்ளியில் இருந்தன. இலங்கை தூதர் Mr.V.V. Giri ஒருமுறை Mandapam Camp -க்கு வந்தார். அவருக்கு Guard of Honour என்று இருபுறமும் மாணவர் நின்று Scouts கம்புகளை
" Inverted V" போல் பிடித்து வரவேற்பு கொடுத்தோம்.
__________________________________________________________________
பள்ளியில் Mango Jam செய்தது
Mandapam Camp பள்ளியில் Head Master -ன் அறை இருந்த தனிக் கட்டிடத்தில் ESLC வகுப்பு, 7-வது வகுப்பு, 6-வது வகுப்புகள் நடைபெற்றன. பள்ளி எதிரே இருந்த மரத்தடியில் Navam Teacher வகுப்பு மாணவர்களை உட்கார வைத்து மாம்பழ Jam செய்து காட்டினார்கள். கிளிமூக்கு மாம்பழம் என்று அழைக்கப்பட்ட மாம்பழங்களைத் சிறுதுண்டுகளாக வெட்டி எடுத்து, ஜீனியை ஒரு கனமான பாத்திரத்தில் கொட்டி, அடுப்பில் வைத்துக் காய்த்து, பாகு தயாரித்து பின்னர் வெட்டப்பட்டிருந்த மாம்பழத் துண்டுகளை இந்த பாகுக்கள் போட்டு நன்கு கிளறி ஆற வைத்து பாட்டிலில் அடைத்து வைக்க வேண்டும்.
_____________________________________________________________
பள்ளியில் Games Period : வீட்டு Campus -ல் Foot Ball
பள்ளியில் சாயங்காலம் கடைசி period ( Games Period)-ல் Queue ஆக Railway தண்டவாளம் செல்லும் இடத்திற்கு அருகேயுள்ள பெரிய மைதானத்திற்குக் கூட்டிச் செல்வார்கள்.அங்கு drill செய்ய வைப்பார்கள். மற்ற விளையாட்டுப்பற்றி ஞாபகம் இல்லை. பள்ளி முடியும்போது அவரவர் வீட்டிற்கு ப் போகலாம். அந்த மைதானத்தின் ஓரத்தில் இலந்தைமரம், நவ்வாப் பழமரம் மற்றும் பெயர் தெரியாத காட்டுமரம் இவற்றில் கல்வீசி பழம் விழச் செய்து சாப்பிடுவோம்.பின்பு வீட்டிற்குப் போவோம்.
வீட்டின் எதிரே திறந்த வெளி கால்பந்து மைதானம் அளவுக்கு உண்டு. பெரியம்மா எங்களுக்கு Foot - ball, bladder, air - pump, bladder -ஐ உள்ளே திணித்து காற்றடித்து Foot Ball- வாயினைக் கட்ட கம்பியால் ஆன ஊசி போன்ற கருவி , puncture ஆகி விட்டால் ஒட்டுவதற்கான Solution என அனைத்தும் வாங்கிக் கொடுத்தார்கள். Bladder - ஐ Mouth வழியாக உள்ளே அமுக்கி, air -ஐ pump செய்து தேவையான pressure வந்ததும் Mouth - ஐ இறுகக் கட்டி, bladder -ன் நுனியில் உள்ள மூன்று அங்குல நீள tube ஐ மடக்கி,Foot Ball-ன் Mouth உள்ளே அழுக்கித் தள்ளி பின்னர் Mouth -ன் இரு ஓரங்களில் உள்ள holes வழியாக (leather-ஆல் ஆன) thread - ஐ முறைப்படி, shoe lace கட்டுவதுபோலக் கட்டி, முடிச்சி போட வேண்டும். சில நேரம் முள் குத்தி puncture ஆகிவிடும். அதை ஒட்டுவதற்கு rubber piece, solution ஐப் பயன்படுத்தி bladder - ஐச்சரி செய்வோம். மைதானத்தின் இரு ஓரங்களில் Goal posts நடப்பட்டிருந்தன.
ஆடு, கோழி வளர்ப்பு
Mandapam Camp - ல் வீட்டை ஒட்டி காலி இடங்களில் பனை மட்டை கொண்டு வேலி அமைந்திருக்கும். வீட்டின் தெற்குச் சுவரில் துவங்கி Church க்குச் செல்லும் வழி வரை இந்த வேலி இருந்தது. வெரண்டாவின் தென்புறம் கொட்டகை போட்டு அதில் ஆடுகள் வளர்த்தோம். அந்த கொட்டகைக்கு வீட்டு வெராண்டாவிலிருந்து உள்ளே செல்ல வழி உண்டு. வீட்டின் முன் இரண்டு வேப்ப மரங்கள் உயரமாக வளர்ந்து கூரை மேலே சென்றன. மரக் கூண்டுகள் செய்து இரவில் கோழிகளை அவற்றில் அடைப்போம். அப்படியும் சில நேரம் வெருகு எனும் காட்டுப்பூனை கோழிகளைக் கடித்துக் கொன்றுவிடும். கோழிகளை முட்டை இடுவதற்காக பஞ்சாரத்தை வைத்து மூடி வைப்போம். கோழி முட்டைகளைச் சேர்த்து ஒரு கோழியை அவற்றை அடைகாக்க ச் செய்வோம். 21 நாட்கள் அடைகாலம் ஆகும். பின்னர் முட்டை களிலிருந்து குஞ்சுகள் தாமாகவே வெளியே வந்து விடும். அடையிலிருந்த கோழி மிகவும் பெலவீனமாகிப் படுத்தே கிடக்கும். ஆனால் அதன் மேல் தண்ணீரை ஊற்றி படுக்க விடாமல் செய்வார்கள்.
ஆடுகள் வளர்ந்து குட்டிகள் போடும். ஆடுகள் குட்டிபோட்ட உடனேயே குட்டிகள் அதன் தாய் ஆட்டிடம் நின்றுகொண்டு பால் குடிக்கப் பழகிவிடும்.ஆட்டுப்பால் கறந்து காப்பிக்குப் பயன்படுத்துவோம். ஆடுகள் உடை மரத்து காய்களைத் தின்னும். காய் வளையம் போல் இருக்கும்.உடை மரத்துக்காய்களை வேலி தாண்டி பக்கத்து compound - குச் சென்று பறித்து வருவோம்..
____________________________________-_____
பம்பரம் சுற்றுதல்
சிறுவர்களாக நானும், Jeyaraj - ம் பள்ளிப்பருவத்துச் சிட்டுகளாகச் |சிறகடித்துச் .சுற்றிய காலத்தில் பம்பரம் விடக் கற்றுக் கொண்டோம் .
பம்பரம் பல அளவுகளில் பல வண்ணம் பூசப்பட்டு விலைக்குக் கிடைக்கும். பெரிய size பம்பரம் எனில் அதன் விலை அதிகமாக இருக்கும். பம்பரத்தின் அகன்ற மேற்பகுதியிலிருந்து துவங்கி கீழ்ப்பகுதிவரை குறுகி வந்து, அதன் நுனி சிறிய ஆணியைத் தாங்கும் படி இருக்கும். விலைக்கு வாங்கும் போது ஆணியுடன் இருந்தால் அதை எடுத்து விட்டு வேறு பெரிய பலமான ஒன்றை வைத்தாக வேண்டும். சாதாரண ஆணியினை அடித்து பின்பு ஆணியின் தலைப்பகுதியினை வெட்டிரும்பு கொண்டு வெட்டி விடுவார்கள்.பின்பு அரத்தை வைத்து நுனியினைத் தேய்த்து கூர்மையாக்கிவிடுவார்கள். சாட்டை என்று அழைக்கப்படும் பம்பரக் கயிறு விலைக்குக் கிடைக்கும். ஆணியை ஒட்டி, கயிற்றின் ஒரு நுனியை அமுக்கிப் பிடித்து, உச்சியை நோக்கி கயிற்றைச் சுற்றி வந்து, பின்னர் கயிற்றின் மீதிப்பாகத்தைக் கையில் சுற்றியோ, சுற்றாமலோ பிடித்துக் கொண்டு முழு பலத்துடன் வேகமாகக் கயிற்றை இழுத்து, பம்பரமானது செங்குத்தாக தரையில் சுற்றும்படி விடவேண்டும்.ஆரம்பத்தில் பம்பரம் அதன் ஆணி (Peg)யில் செங்குத்தாக நின்று சுற்றாமல் தலை கீழாகச் சுற்றலாம். பழகப் பழக பம்பரம் நேரான படி சுற்றவைக்க முடியும். . கயிற்றின் இரு முனைகளையும் இரண்டு கையில் பிடித்து, தரையில் சுழலும் பம்பரத்தைக் கயிற்றில் வரும்படி தூக்கி நமது வலது கையின் மேல் சுற்ற வைக்கலாம். சிறுவர்கள் இரண்டு மூன்று பேர் சேர்ந்து ஒருவரது பம்பரத்தைத் தரையில் வரையப்பட்ட வட்டத்துக்குள் வைத்து மற்றவர் அந்தப் பம்பரத்தின் மேல் தங்கள் பம்பரத்தின் ஆணி இறங்கும்படி குத்துவார்கள். குத்து வாங்குவது தோல்வியாகவும், அவமானமாகவும் கருதப்படும்.
Copyright © 2023 mangalaraj@gmail.com - All Rights Reserved.
Powered by GoDaddy