Free Shipping on all orders.

Mangalaraj's Writings
Mangalaraj's Writings
  • Home
  • Contact Us
  • About Us
  • எனது கவிதைகள்
  • எனது சிறு கதைகள்
  • எனது எண்ணங்கள்
  • எனது நினைவுகள்
  • எனது சிந்தனைகள்
  • Academic Tutor
  • More
    • Home
    • Contact Us
    • About Us
    • எனது கவிதைகள்
    • எனது சிறு கதைகள்
    • எனது எண்ணங்கள்
    • எனது நினைவுகள்
    • எனது சிந்தனைகள்
    • Academic Tutor
  • Sign In
  • Create Account

  • Bookings
  • My Account
  • Signed in as:

  • filler@godaddy.com


  • Bookings
  • My Account
  • Sign out


Signed in as:

filler@godaddy.com

  • Home
  • Contact Us
  • About Us
  • எனது கவிதைகள்
  • எனது சிறு கதைகள்
  • எனது எண்ணங்கள்
  • எனது நினைவுகள்
  • எனது சிந்தனைகள்
  • Academic Tutor

Account


  • Bookings
  • My Account
  • Sign out


  • Sign In
  • Bookings
  • My Account

எனது எண்ணங்கள்

எண்ணம் - 1



 ஆரம்ப காலத்தில் பூமியானது நெருப்புப் பிழம்பாக இருந்துள்ளது  என்பதற்கு  எரிமலையிலிருந்து வெடித்துச் சிதறும் அக்கினிக் குழம்பு  சான்றாக அமைகிறது. 

எண்ணம் - 2

 அறிவியல் சிந்தனை மனிதனுக்குத் தோன்றும் முன்பு மூட நம்பிக்கையில்  மூழ்கிப்  போயிருந்தான். பல்வேறு தவறான கருத்துக்களைக் கொண்டிருந்தான்.  பூமி  தட்டையானது என நம்பினான். பூமி உருண்டை வடிவம் உடையது என்பதைப்  பின்னர்தான்  அறிந்து கொண்டான் சூரியன் பூமியைப் சுற்றிவருவதாகவே முன்னர்  எண்ணி  வந்தான். பூமி தான் சூரியனைச் சுற்றிவருகிறது என்பதைப் பிறகே  அறிந்தான்.  பூமி தன்னைத்தானே சுற்றுவதால் தான் இரவும் பகலும் ஏற்படுகின்றன  என்பதை வெகு  காலத்துக்குப் பின்பே அறிந்தான்  

எண்ணம் - 3

 

இப்புவிதனில் நாம் ஒரு முறைதான் வாழ்கிறோம். விரைவாக வாழ்வுப்பாதையைக் கடந்து செல்கிறோம். இப்பாதையில் நாம் மீண்டும் வரப்போவதில்லை.

செய்து விட்ட தவறைச் சீர் செய்வதற்கு மீண்டும் வாய்ப்பு வரப்போவதில்லை.

செய்தது  செய்தது தான். சொன்ன சொல்லைத் திரும்பப் பெற வழி இல்லை. சொன்னது சொன்னது  தான்.  மீண்டும் பெறமுடியாத வாய்ப்பினைச் சரியாகப் பயன்படுத்துவோம்.

எண்ணம்-4

பணம்  மனிதரை இயக்க வைக்கின்ற மாபெரும் சக்தி என்பது யாவருக்கும் தெரிந்த உண்மையாகும்.

பணத்திற்காக  மனிதன் எவ்வாறெல்லாம் நடந்து கொள்கிறான் என்பதை ஆராய்ந்து பார்த்தால்  வேடிக்கையாக இருக்கும். மனிதர் பின்னே ஓடுவதும், கூழைக்கும்பிடு போடுவதும்,  வானளாவப் புகழ் பாடுவதும், அடிமைச் சேவகம் ஆற்றுவதும், கை கட்டி  வாய்பொத்தி நிற்பதும் வேடிக்கையான காட்சிகளாகும்.

எண்ணம் - 5

 இப்பிரபஞ்சம் எத்துணை பெரியது., விரிவானது. என்று எண்ணிப் பார்க்கும்போது, புவிதனில் நமது இடம் ஒரு புள்ளியளவுக்குக் கூட இருக்காது.

அண்டவெளி முழுமையையும் கருதும் போது பூமி வகிக்கும் இடம் குறிப்பிடத்தக்க ஒன்றல்ல.

பூமியில் வாழும் கோடானு கோடி மாந்தரில், ஒரு தனி மனிதனின் நிலை பொருட்படுத்தக் கூடிய ஒன்றல்ல.

எண்ணம் - 6

பூமியிலுள்ள பொருள் எல்லாம் பூமிக்குத்தான்  உரியவை ஆகும்.

ஆம். இந்த பூமியில் உள்ளவை யாவும் பூமிக்குத்தான் சொந்தம் ஆகும் 

உலகில்  சக்தி நிலையானது . சக்தி குறைவதோ , கூடுவதோ இல்லை என்பது அறிவியல் உண்மை . 

அது போன்றே பூமியின் ஒட்டு மொத்த மதிப்பும் நிலையாக உள்ளது 

பொருளை உடைமையாகப் பெற்றிருந்த மனிதன் மறைந்துவிடலாம். 

பொருள் வேறு ஒருவனுக்கு உடைமையாகலாம் .அவனும் மறைந்துவிடும்போது 

பூமியில் பொருள் மாறாமல்  உள்ளது.

இவ்வுலகில் உயிர் இனங்கள்  தோன்றலாம் ;மறையலாம். 

ஆனால்  பூமியும் , பூமியிலுள்ள பொருட்களும் மறைவதில்லை. 

உருவத்தில் சிதைவு நேரலாம். ஆனால் மொத்தமாக அதன் மதிப்பு மாறாது. 

தாதுவாக இருப்பது உலோகமாக உருப்பெறலாம் மலைகள் சிதறிப்போகலாம் 

பாறைகள் பொடிபொடியாகலாம் ஆறுகள் வற்றி ப் போகலாம் ; வறண்டு போகலாம். ஆனால் பூமியை 

முழுமையாகப் பார்த்தால் பூமி முன்போல் அப்படியே இருப்பது தெரியும் .

மாற்றம் ஏற்படலாம் மதிப்பு மாறுவதில்லை.

எண்ணம் - 7

இயற்கைக்கு ஈடு எதுவும் கிடையாது.

மழையில்  நனைந்த செடியோ, மலரோ புதுப்பொலிவுடன் தோற்றம் அளிக்கிறது. நாம் என்னதான்  நீர் ஊற்றினாலும் இயற்கை அளிக்கும் மழைநீர் தான் தாவர இனத்துக்குப்  புத்துயிரும் புதுப்பொலிவும் தருகின்றது.

எண்ணம் - 8

கையில் இருப்பதைத் தொலைப்பது இழப்பு. அது  போன்றுதான் கைக்கு வரவேண்டியது வராமல் போவதும் இழப்பு என்று கருதப்படலாம்.  ஆனால் இது கற்பனையான இழப்பு இழப்பின் கணக்கை இப்படித் தீர்மானித்தால்  இழப்பின் அளவுக்கு எல்லையே இராது. எனவே கையிலிருந்து இழந்ததைக்கூடப்  பொருட்படுத்தக்கூடாது. உண்மை இழப்பாகப்

பொருள் இழப்பைக் கருதக்கூடாது.

எண்ணம் - 9

 

கண் காணாத தெய்வங்கள் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் கண்கண்ட தெய்வங்களைப் பற்றி எனக்குத் தெரியும்.

இரக்கத்தின இருப்பிடமாக இருப்பவர்கள் எனக்குக் கண்கண்ட தெய்வங்கள். கருணையின் வடிவமாக இருப்பவர்கள் எனக்குத் கண் கண்ட தெய்வங்கள்.

ஏழைகளாக இருந்தாலும் புன்னகை சிந்தும் இன் முகத்தினர் எனக்குக் கண்கண்ட தெய்வங்களாகத் திகழ்கின்றனர்.

மண்ணகத்தை விண்ணகமாக மாற்றிடும் மனிதர்களே  என்னுடைய எண்ணத்தின்படி

கண்கண்ட தெய்வங்களாகக் காட்சி தருகின்றனர்.

எண்ணம் - 10


மூப்பு பிணி போன்றவை மனிதனின் வாழ்க்கையில்  திர்மறையாகச் செயல்பட்ட போதிலும் வாழ்க்கையின்மேல் உள்ள பற்றை விட்டு வீடாக  கூடாது.வாழ்க்கையில் நிலையாமை என்பது உண்மையான 

கருத்து  என்ற போதிலும் அதனை எண்ணி வாழ்க்கையிலுள்ள பிடிப்பினை  இழந்துவிடக்கூடாது.உயிர் மூச்சு உள்ளவரை வாழ்க்கையை நம்பிக்கையோடு  எதிர்கொள்ளவேண்டும் 

எண்ணம் - 11

கேட்பவர் உள்ளம் மெழுகு போன்றுஉருகும் வண்ணம்  தேனாக இனித்திடும் இனிய குரலில் பாடல் ஒலித்திடும்போது களிப்புக் கடலில் மூழ்கித் திளைப்பவர் அப்பாடலைப் பாடுகிறவரா அல்லது அப்பாடலுடன் தனது உயிர் கலந்து விட்ட தோ என்று எண்ணும் அளவுக்கு ஒன்றிவிடுகின்ற ரசிகரா என்று கேட்டால் அப்பாடலைக் கேட்பவர் தான் என்று கூறவேண்டும். பாடல் பாடப்படும் போது அதைக் கேட்டுக் கிறுகிறுத்துப் போகும் நெஞ்சுக்குச் சொந்தக்காரர்கள் யாரோ  அவர்களே அப்பாடலைப் பாடுகிறவரைவிட மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்ந்து போகின்றனர்



எண்ணம் - 12


ஒளி வெள்ளம் பாய்கிற இடங்களில் இருப்பவர்களுக்கு இருட்டில் வாழ்பவர்களின் இன்னல்கள் பற்றி எதுவுமே தெரியாமல் போய்விடும். செல்வச் செழிப்பில் திளைப்பவர்களுக்கு வறுமையில் வாடும் ஏழைகளின் துயரங்கள் அறவே தெரியாது. கண்ணைப் பறிக்கும் ஒளியில் வாழ்ந்து பழகிவிட்ட காரணத்தால் இருள் சூழ்ந்து நிற்கும் நிலை பற்றி உணர்ந்து கொள்ள முடியாது. 500 ரூபாய் நோட்டுகளைக் கட்டுக்கட்டாய்த் தொட்டு புழங்குபவர்க்கு ஐந்து ரூபாய் நாணயங்கள் எல்லாம் மிகத் துச்சமாகத் தெரியும். ஆனால் அந்த ஐந்து ரூபாய் இருந்து விட்டால்கூட மனம் குளிர்ந்துபோய் அதைப் பெரிதாக எண்ணும் - எடுத்துக்கொள்ளும் உள்ளத்தினரும் இருக்கத்தான் செய்கின்றனர். Auto வுக்குப் பணம் தருகிறேன் என்றபோது என்னிடம் ஐம்பது ரூபாய் இருக்கிறது என்று வந்த பதில் சிந்திக்க வைத்தது.


எண்ணம் - 1 3

  

உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பல கற்றும் 

கல்லார் அறிவிலா தார் என்பது திருக்குறள் ஆகும். 

கற்றதன் பயன் உலகத்தோடு ஒட்ட ஒழுகலாகும் .

உலகத்தோடு இணைந்து வாழ்கிறவர் மட்டுமே அறிவுடையவர் எனலாம் .

சுற்றிலுமுள்ளவரோடு இணக்கமாக வாழ்தல் மகிழ்ச்சிக்கு வழியாகும்.. 

இன்பத்தின் திறவுகோலாகும். சுற்றுப்புறத்தில் உள்ளவரோடு இணக்கமான உறவு 

கொண்டடிருப்பவரே ஆரோக்கியமான ஆளுமை உடையவர் என்று கூறலாம ,ஆரோக்கியமான ஆளுமை உடையவரே மகிழ்ச்சியாக வாழ்கிறார் எனலாம். எனவே மகிழ்ச்சிக்கு வழி மற்றவரோடு இணக்கமான உறவுடையவராக இருப்பது ஒன்றே ஆகும்.


எண்ணம் - 1 4

  

சிறு வயது பருவம் . பகை யறியாத பருவம் 

பொறாமை இல்லாத சின்னஞ் சிறு உலகம்.

நெஞ்சில் கள்ளம் இல்லை.கபடு இல்லை. 

வஞ்சகம் இல்லை. சூது இல்லை . வாது இல்லை. 

குற்றம் குறை இல்லாத வெகுளித்தனம் கொண்ட மனம்.

மாசு மருவற்ற உள்ளம்.நடக்கக் கூடியது , நடக்க முடியாதது 

என வேறு படுத்த இயலாத எளிமை ததும்பும் எண்ணம் .

கற்பனையின் உச்சத்தைத் தொடுகின்ற விருப்பங்கள். 

எல்லை காணாத ஆசைக் கனவுகள் வந்து போகும் பருவம் 

நிஜ வாழ்வுக்கு ஒவ்வாத நிழலான காலக்கட்டம்


எண்ணம் - 1 5


( மெஸ்டன் கல்வியில் கல்லூரியில் 2001-ல்) கலைவிழா வெகு விமரிசையாக, திருவிழா போல நடந்து முடிந்தது. மறுநாள் இரவு எந்தவொரு தடையமும் அங்கு இல்லாமல்- மேடையும், பந்தலும், கொடிகளும், தோரணங்களும் அகற்றப்பட்டு, இந்த இடத்திலா விழா நடந்தது என்று வினவிடும் வண்ணம் வெறிச் சென்று இருந்தது.

வாழ்க்கை எத்துணை குறுகியது என்பதையும், வாழ்க்கை  எத்துணை அநித்யமானது என்பதையும் குறிப்பாலுணர்த்துவதுபோல அக்காட்சி இருந்தது வாழ்வின் நிரந்தரமற்ற தன்மையை உணர்த்தியது.



நாளொரு எண்ணம் 

என் இளம் வயதிலிருந்தே எண்ணங்களின் ஊற்றுக்கண்களாக என் மனம் இருந்து வந்துள்ளது. அவ்வப்போது புதுப் புது எண்ணங்கள் மனத்தில் தோன்றிய வண்ணம் இருக்கும். பணியில் இருந்த காலத்தில் அவற்றைப் பதிவு செய்ய நேரம் கிடைக்கவில்லை. பனி ஓய்வுக்குப் பின்பு நிறைய ஓய்வு நேரம் உள்ளது. பழைய விதைகள் 

எவ்வறு நீண்ட இடைவெளிக்குப் பின்னர் நடப்பட்டு நீரூற்றப்   பட்டால் உயிர்கொண்டு வேர் கொண்டு முளைக்கின்றனவோ அது போன்றே இளம் வயதில்   மனத்தில்  எண்ணங்கள் இப்போது மீண்டும் .துளிர்க்கின்றன. 


___________________________________________________________________

எண்ணம்

(20 -4 - 11) நேற்று பேட்டை வீட்டு மாடியிலி ருந்து ரோட்டைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போது உப்பு மூட்டையைக் கைவண்டியில் வைத்து மனிதர் ஒருவர் வண்டியை இழுத்துச் சென்று உப்பை விற்றுக் கொண்டிருந்த காட்சி கண்ணில் பட்டது. பொதுவாக, மாட்டை வண்டியில் பூட்டி, வண்டியில் உட்கார்ந்து விற்பார்கள். ஆனால் ஏழ்மையின் காரணமாக மாட்டிற்குப் பதிலாக மனிதனே இழுத்துச் செல்ல வேண்டிய அவலம் மனத்தைத் தொட்டது. உழைத்துப்பிழைக்கும் எண்ணத்தில் உண்மையாக, நேர்மையாக நடந்து, வாழ்க்கையில் எதிர்நீச்சல் போடுகிற மனிதரைப் பார்க்கும்போது, பணம், பணம் என்று அலையும் பேராசைக்காரரை எண்ணி எரிச்சல் தான் வருகிறது.    

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

மன நிறைவு


மன நிறைவு என்பது ஒருவரது மகிழ்ச்சிக்கு அடிப்படையாக அமைகிறது. பணம் மட்டுமே மகிழ்ச்சியைத் தீர்மானிக்கிற காரணி என்றிருந்தால், ஏழைகள் வாழ்வில் மகிழ்ச்சி ஏற்படுவதற்கு வழியில்லாமல் போயிருக்கும். ஏழ்மையில் உழலுகின்ற மனிதரும் அவ்வப்போது மகிழ்ச்சியில் திளைக்கின்றனர். அன்றாடங்காய்ச்சிகளாய்ப் பசியிலும் பட்டினியிலும் வாடி நிற்பவரும், உண்ண உணவின்றி, உடுக்க உடையின்றி, இருக்க இடமின்றி தவிப்பவரும் எப்போதும் சோகத்தில் மூழ்கி நிற்பதில்லை. அவர்தம் முகத்தில் சிரிப்பும், அவர்தம்  அகத்தில் மகிழ்ச்சியும் தோன்றுவதுண்டு. இம் மகிழ்ச்சி தோன்றக் காரணமாக அமைவது அவர்கள் தங்கள் வாழ்வில் அடைகின்ற மனநிறைவுதான்.


பணத்தில் மிதப்பவர் உலகில் மிகச் சிலரே ஆவர். பெரும்பான்மையானவர் வாழ்வது ஏழ்மையில்தான். படித்தவர்கள், பட்டம் பெற்றவர்கள் சம்பாதிக்கக் கூடியது மாதத்திற்குப் பத்தாயியிரம் ரூபாய் தான் என்று தோன்றுகிறது. தனியார் பணியில் இந்த அளவில் தான் சம்பாதிக்க முடிகிறது. ஆதரவற்ற முதியவர்கள் வீட்டு வேலைக்குப் போவதை பேட்டை வீட்டு மாடியிலிருந்து பார்த்தேன்.வயதான பெரியவர் ஒருவர் இரண்டு அலுமினிய தூக்கில் பால் எடுத்துச் சென்று வீடு வீடாகக் கொடுப்பதைக் கண்டேன். உழைத்துப் பிழைப்பு நடத்த வேண்டிய கட்டாயத்தில் பலர் இருக்கிறார்கள்.அவர்கள் வாழ்வில் மகிழ்ச்சி வருமா என்றால் எப்போதாவது வரும் என்றே தோன்றுகிறது. பணத்தில் புரள்கிறவர்களுக்கு இந்த மகிழ்ச்சி இல்லை. அதற்குக் காரணம் மனநிறைவு அவர்களிடம் இல்லை.

,__________________________________________________________


நினைத்துப் பார்க்கிறேன்


1948 முதல் 1958 வரை Mandapam Camp, Kilakarai மற்றும் Ramanathapuram ஆகியவற்றோடு பள்ளிப்பருவத்திலே ஏற்பட்ட தொடர்பினை அரை நூற்றாண்டுக்குப் பின்பு இன்று  நினைத்துப் பார்க்கிறேன். அன்று வரப்போகும் வாழ்வு பற்றி எதுவும் பெரிதாக  எதிர்பார்க்கவில்லை. இன்று ஐம்பது ஆண்டுகள் கழித்து மண்டபம் கேம்ப், கீழக்கரை மற்றும் இராமநாதபுரத்தில் காலடி பதிக்கும்போது நெஞ்சம் முழுவதும் நிறைவு வழிந்தோடுகிறது. எட்டாத உயரத்துக்குச் சென்றுவிடவில்லை என்ற போதிலும், அமைந்த வாழ்வு பற்றி மனம் திருப்தி அடைகிறது. படித்த படிப்போ, கிடைத்த பணியோ, சேர்ந்த செல்வமோ எதுவாயினும் உச்சத்தைத் தொட்டதாகக் கருதமுடியாது தான். ஆயினும் எட்டிப் பிடித்த உயரம், அடைந்த சிறப்பு குறித்து மனம் நிறைவு பெறும் விதமாகவே உள்ளது. இராமநாதபுரத்தில் இருக்கும் ஒவ்வொரு நாளும் இந்த மனநிறைவை உணர்ந்து மகிழ்கிறேன்.


_________________________________-_________________________

__________________________________

மகிழ்ச்சியைத் தேடி மனிதன் புறப்பட்டான் என்று செவியுறும்போது எழும் கேள்வி: மகிழ்ச்சி விலைக்கு வாங்கப்படக் கூடிய பொருளா?

மகிழ்ச்சி உள்ளத்தின் உள்ளிருந்து வருகிறதே தவிர வெளியிலிருந்தல்ல.

அனைவருக்கும் வாழ்க்கையின் உன்னத நோக்கம் மகிழ்ச்சி ஆகும். ஆனால் அதை அடைவது எப்படி என்று தெரியவில்லை.

பூந்தென்றல் போல் மனக் கதவு . திறந்திருந்தால் மட்டுமே மகிழ்ச்சி உள்ளே வரும்.

உள்ளம் மகிழ்ச்சிக்கு வரவேற்பு அளிக்காத வரை அது மனத்தில் வந்து குடியேறாது.

மற்றவரின் மகிழ்ச்சிக்கு வழி உண்டாக்குகிறவர்களுக்கு மட்டுமே மற்றவரிடமிருந்து மகிழ்ச்சி பெறுதலை எதிர்நோக்க உரிமை உள்ளது.


____________________________________


ஒரு கற்பனையாளனுக்கு வெளியில் காட்ட விரும்பாத மற்றொரு முகமும் உண்டு. வெளி உலகுக்குத் தெரியாதவாறு வைத்துக் கொள்வதற்குக் காரணம் அது வெட்கப்படும்படி யானதாகவும், கேவலமானதாகவும் கருதப்படுமோ என்ற உள் மனத்திலுள்ள பயம்தான்.


ஆனால் கற்பனையாளனைப் பொறுத்த மட்டில், வெளியே தெரியாத அவனது மறுபக்கம் கேவலமான தன்று.அழகுணர்வின் அடிப்படையில் தோன்றுகின்ற ஒன்று.


கற்பனையாளன் என்ற முறையில் அவனது பார்வையும், பழகுதலும் தனி உரிமம் பெற்றவையாகும். பார்க்கவும், தொடவும் சிறப்புரிமை அவனுக்கு உண்டு, சிலைவடிக்கும் சிற்பிக்கு உள்ளதைப்போன்று.


மகிழ்ச்சியின் துவக்கம்


மகிழ்ச்சியான வாழ்வுக்கு நேரம் வரவில்லை, அதற்கான சூழ்நிலை இன்னும் தோன்றவில்லைஎன ஆனந்தத்தின் ஆரம்பத்தை ஒத்திவைத்துக்கொண்டே போவதில் அர்த்தமில்லை. எந்தப் பயனும் கிடைக்கப் போவதில்லை.

இப்படி நடந்த பின்பு தான் மகிழ்ச்சியடையலாம், இவை எல்லாம் நடந்தபின்பு தான் சந்தோஷமாக இருக்கத் துவங்கலாம் என யாரும் இருக்கக் கூடாது.


இன்று மகிழ்ச்சி கொள்ள முடியாது என்று கூறுவதற்குக் காரணங்கள் ஏதுமில்லை எனில் இன்றே மகிழ்ச்சியடையத் துவங்க வேண்டும். மகிழ்ச்சியின் பாதையில் அடியெடுத்து வைத்துச் சென்றிட வேண்டும், இல்லையெனில் இழப்பு நமக்குத்தான்.நமது வாழ்நாள் வீணானதுதான் கண்ட பலனாகி நிற்கும்.

-----------------------------------------

நெஞ்சில் அலை மோதும் எண்ணங்களை எழுதி வைக்கிற இந்தக் கையேட்டினை விழா மேடையில் மறந்து விட்டு விட்டேன்.அதனை மேடையின் ஒரு ஓரத்தில் ஒதுக்கித்தள்ளி விட்டு நடனம் மற்றும் இசை நிகழ்ச்சிகள் நடைபெற்று முடிந்து விட்டன.

இரவில் தான் ஞாபகம் வந்தது. தேடிப் பார்த்து எடுத்து வந்தபோது நெஞ்சம் முழுதும் நிம்மதி நிறைந்தது. என்ன தான் முயன்றாலும் அவ்வெண்ணங்களை அப்படியே திரும்ப எழுத்தில் வடிக்க முடியாது என்பது நிச்சயம்

------------------------------------------------

ஜீன்ஸ்' திரைப்படம் இடை வேளை வரை தொலைக்காட்சியில் பார்த்தேன்.அதுவரை கதையில் வந்த கருத்து என் மனத்துக்கு ஒத்துப்போவதாக இருந்தது. இரண்டு சகோதரர்களுக்கு இடையே உள்ள நெருக்கத்தை விட இரட்டைச் சகோதரர்களிடையே இருக்கும் நெருக்கம் சிறப்பானதாகவே இருக்கும். இவர்களுக்கு அமைகின்ற மனைவிமாரும் இரட்டைச் சகோதரி…


--------------------------------------------------


சாப்பாட்டில் எண்ணெய், உப்பு, இனிப்பு இவை எதுவுமே சேர்க்காமல் சாப்பிட்டு வருவது ஏன் என்று யோசித்துப் பார்க்கிறேன். நீண்ட நாள் வாழ வேண்டும் என்று விரும்புவதால்தான் கடுமையான உணவுக் கட்டுப்பாட்டைக் கடைபிடிப்பது என்பது தெளிவாகிறது. நீண்ட நாள் வாழ வேண்டும் என்று ஆசைப்படுவதற்கு என்ன காரணம் என்றால் சார்த்து நிற்கும் அன்பு உள்ளங்கள் தான் முக்கியமான காரணமாகத் தோன்றுகிறது. உயிர் வாழ்ந்து, நேசம், பாசம் கொட்டும் உறவுகளைத் தாங்கி நிற்க விரும்பும்போது , அவ்வுறவுகளை எந்த நேரமும் அன்பு காட்டி கோபம் கொள்ளாமல், குறை சொல்லாமல் நடத்த  வேண்டும் என்று உறுதி மேற்கொள்ளல் நன்று.


-----------------------------------------

கலை விழா வெகு விமரிசையாக திருவிழா போல் நடந்து முடிந்த மறுநாள் இரவு எந்தவொரு தடையமும் அங்கு இல்லாமல் மேடையும், பந்தலும், கொடிகளும், தோரணங்களும் அகற்றப்பட்டு,  " இந்த இடத்திலா விழா நடந்தது.?" என வினவிடும் வண்ணம் வெறிச்சென்று இருந்தது.

வாழ்க்கை எத்துணை குறுகியது. என்பதையும், வாழ்க்கை எத்துணை அநித்யமானது என்பதையும் குறிப்பாலுணர்த்துவது போல அக்காட்சி இருந்தது. வாழ்வின் நிரந்தரமற்ற தன்மையை உணர்த்தியது.


---------------------------------------------------------------------------------------

தனியாக ஆள்வது-தனக்கு மேல் எவரும் ஆளுகை செய்ய மனம் ஒவ்வாதது - இதுதான் சில நேரம் மற்றவருடன் ஒத்துப் போவதற்கு இடம் தராமல் மனம் இருந்ததற்குக் காரணம் ஆகும்.


----------------------------------------------------------------------------

 என்னை நம்பியா  அவர்கள் உலகில் தோன்றினர்?

என்னைச் சார்ந்தா  அவர்கள் வாழ்வு அமைந்தது?

நான் என்ன கடவுளா ,யாவருக்கும் வழிகாட்ட.?

பல நேரங்களில் தீர்வுகாண முயலாமல், 

தப்பித்ததற்கு மனம் நியாயப்படுத்திய விதம். 


---------------------------------------


ஒரு காட்சியை மொத்தமாக, தூரத்திலிருந்து பார்க்கிற போது - பகுதிபகுதியாகப் பார்க்கும் போது புலனாகக் கூடிய குறைபாடுகள் தெரியாமல் போகின்றன. அது போன்றே, எதிலும் தூரத்துப் பார்வைதான் கடைபிடிக்கப்பட வேண்டும். தனிப்பட்ட எவரையும் பற்றி மொத்த மதிப்பீடு செய்யும் போது, சிறுசிறு குறைகள் தோன்றாது போய்விடும் 


______________________________________-___


முதுமையில் தள்ளாமை

முதுமையின் தாக்கம் மனித உடலிலும், உள்ளத்திலும் சோர்வை உண்டாக்குகிறது. இயலாமை காரணமாக எப்படியாவது நடந்தால் சரிதான், எது நடந்தாலும் சரிதான், யார் செய்தாலும் சரி தான் என ஏற்றுக்கொள்ளும் நிலை உருவாகிறது. எத்தனை பணம் செலவானாலும் பரவாயில்லை. வேலை முடிந்தால் சரி எனத் தோன்றுகிறது. கனமான சுமையை எடுத்து வேறு இடத்தில் வைக்கவோ, அதை ஏற்றவோ, இறக்கவோ வேறு ஆளின் உதவி தேவைப்படுகிறது. இவ்வுதவிக்கு எவ்வளவு பணம் ஆனாலும் அதைக் கொடுத்து தான் தீர வேண்டும்.நம்மால் இயலாததை எவராவது செய்தால் சரி என ஏற்க வேண்டும் (23 - 5 -2011)


_______________________________________


பிரிவு என்பது எப்போதுமே துயரம் அளிப்பதாகும். மீண்டும் சந்திப்போம் என்ற நம்பிக்கை இருப்பதால் பிரிவுத் துயரைத் தாங்கிக்கொள்ள முடிகிறது. ஆனால் இறப்பு என்னும் நிரந்தரப் பிரிவு தொடர்புடையவர்களுக்கு எல்லையற்ற வருத்தத்தைத் தருகிறது. மறைந்து விட்ட அன்புக்குரியவரை இனி ஒருபோதும் சந்திக்க முடியாது என்ற எண்ணம் அருமையான வரை இழந்து நிற்போருக்கு மிகுந்த சோகத்தை ஏற்படுத்துகிறது. அதிலும் இளம் வயதில் பிரியத்துக்குரியவர் இறந்துவிடும்போது தாங்கவொண்ணா துயரம் உண்டாகிறது. 


__________________________________________


நாடகம் பார்த்துக் கொண்டிருக்கும்போது, குறிப்பிட்ட காலத்தில் நாடகம் முடிந்து விடும் என்று நமக்குத் தெரியும். எப்படியும் நாடகம் முடிந்துவிடும் என்ற விரக்தியில் நாடகத்தைப் பார்க்காமல் போய் விடுவது  கிடையாது.

செல்லும் பயணம்

தொலைதூரம் என்றாலும், குறைந்த தூரப் பயணம் என்றாலும், துவங்கிய பயணத்தை முழுவதும் மேற்கொண்டு அடைய வேண்டிய இடத்தைச் சென்றடைய வே செய்வோம்.


வாழ்க்கையும் அப்படித்தான். விரக்தி கொள்ளாமல் இறுதிவரை வாழ்ந்தாக வேண்டும். செயல்படும் ஆர்வம் குன்றிப் போகக் கூடாது



தம்பதியர் இருவர் கருத்தொருமித்த வாழ்வு வாழ வேண்டும் என்று சான்றோர் கூறுவார்கள். இருவரும் வெவ்வேறு சிந்தனை உடையவர்களாக இருந்தால் ஒரு வேளை இரண்டு வகையான அணுகுமுறைகளும் இணைந்து முழுமை அடைய முடியும். அதே நேரம் இரண்டு பேரும் எதிரும் புதிருமான எண்ணங்கள் கொண்டால் - இரண்டு துருவங்கள் போல் வேறுபட்டு நின்றால் வாழ்வில் சிக்கல்கள் தான் உருவாகும்

Site Content

Detail your services

If customers can’t find it, it doesn’t exist. Clearly list and describe the services you offer. Also, be sure to showcase a premium service.

Announce coming events

Having a big sale, on-site celebrity, or other event? Be sure to announce it so everybody knows and gets excited about it.

Display real testimonials

Are your customers raving about you on social media? Share their great stories to help turn potential customers into loyal ones.

Promote current deals

Running a holiday sale or weekly special? Definitely promote it here to get customers excited about getting a sweet deal.

Share the big news

Have you opened a new location, redesigned your shop, or added a new product or service? Don't keep it to yourself, let folks know.

Display their FAQs

Customers have questions, you have answers. Display the most frequently asked questions, so everybody benefits.

Site Content

Detail your services

If customers can’t find it, it doesn’t exist. Clearly list and describe the services you offer. Also, be sure to showcase a premium service.

Announce coming events

Having a big sale, on-site celebrity, or other event? Be sure to announce it so everybody knows and gets excited about it.

Display real testimonials

Are your customers raving about you on social media? Share their great stories to help turn potential customers into loyal ones.

Promote current deals

Running a holiday sale or weekly special? Definitely promote it here to get customers excited about getting a sweet deal.

Share the big news

Have you opened a new location, redesigned your shop, or added a new product or service? Don't keep it to yourself, let folks know.

Display their FAQs

Customers have questions, you have answers. Display the most frequently asked questions, so everybody benefits.

Copyright © 2023 mangalaraj@gmail.com - All Rights Reserved.

Powered by

This website uses cookies.

We use cookies to analyze website traffic and optimize your website experience. By accepting our use of cookies, your data will be aggregated with all other user data.

DeclineAccept

My Short Story

Welcome ! 

Watch !

 My Short Stories will appear as BLOGS - A page daily

Learn more